அபிஷேக்கை தொடர்ந்து பிக்பாஸ் 5வது சீசனில் நுழையும் இன்னொரு பிரபலம் !! அட இவரை எதிர்பார்க்கவே இல்லையே !! ஷா க் கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் 5வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக பிரபலங்கள் நுழைய ஆரம்பித்துவிட்டார்கள்.

வீட்டில் இருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக் இப்போது மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என வந்த புரொமோவே ரசிகர்களிடம் செம வைரலானது.

அவரை கண்டு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆகினர், நேற்றைய நிகழ்ச்சியில் நாம் அதை கண்டோம்.

தற்போது அபிஷேக்கை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக ADS Dance Academy பிரபலம் அமீர் பிக்பாஸில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, அதேபோல் சீரியல் நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் பிக்பாஸில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைய இருக்கிறார் என கடந்த சில நாட்களாகவே செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.