ஆதிபராசக்தி அவதாரம் அன்னபூரணியின் கணவருக்கு என்ன ஆனது தெரியுமா ?? அடக்கொடுமையே !! ரொம்ப பாவம்ப்பா !!

சினிமா நியூஸ்

ஆதிபராசக்தி அம்மா மக்களுக்கு தரிசனம் கொடுக்கப் போகிறார் என்று இணையத்தில் சில நாட்களாக போஸ்டர் ஒன்று வைரலாகி வந்தது அனைவரும் அறிந்ததே. யார் இவர் ஏன் மக்கள் இவரை தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள் அப்படி என்ன செய்தார் என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து வந்தார்கள் சில மக்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆதிபராசக்தி அம்மா என்று சித்தரிக்கப்பட்டு அவரின் கால்களைப் பிடித்துக்கொண்டு எங்க அம்மாவை பார்த்தீர்களா என்று ஒரு பெண் கதறி அழ. அன்னபூரணி அவர்கள் சீட்டில் அமர்ந்து கொண்டே குதித்து அதன்பின் தனது கையால் அருள் கொடுப்பதுபோல வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் இவர் எதற்காக இவ்வளவு மக்கள் மாலை போட்டு இவரை வணங்குகிறார்கள் என்று புரியாத புதிராகவே இருந்தது இந்நிலையில் பிரபல மீடியா சேனல் ஒன்று அவரை நேர்காணல் செய்துள்ளார்கள். அதில் பேட்டி எடுப்பவர் எப்படி உங்களை ஆதிபராசக்தி அம்மா என்று கூறுகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு நான் என்றும் என்னை கடவுள் என்று சொன்னதில்லை ஆதிபராசக்தி என்று சொன்னது இல்லை என்னுடைய குழந்தைகள் என்னிடம் இருந்த சக்தியை கண்டுவிட்டு தமக்கு கிடைத்த அருள் பிற மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று அப்படி போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் என்று கூறினார்.

தற்பொழுது நீங்கள் ஆதிபராசக்தி என்று கூறுகிறீர்களா என்பது போல பேட்டியாளர் கேட்க அதற்கு அந்தப் பெண் நான் கடவுள் இல்லை ஆனால் என்னிடம் சக்தி உள்ளது. அந்த சக்தி தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. நான் யாருக்காகவும் என்னுடைய சக்தியை சோதித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் என்னுடைய குழந்தைகள் என்னை பார்க்க வருகிறார்கள் அவர்களுக்கு நான் அருள் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு பேட்டியாளர் குழந்தைகள் என்கிறீர்களே யார் குழந்தைகள் என்று கேட்க அதற்கு அன்னபூரணி அவர்கள் சிறுவயதிலிருந்து 80 வயதானவர்கள் கூட எனக்கு குழந்தை தான் இது தாய் பிள்ளைகளின் பாச உணர்வு அது உங்களுக்கு புரியாது என்று கூறி கேள்வி கேட்பவரே கொஞ்சம் டென்ஷன் ஆக்கினார்.

பேட்டியாளர் அதுசரி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள் அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்க அதற்கு அன்னபூரணி நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உண்மை தான் என்னுடைய சக்தியும் அரசு என்பவருடைய சக்தியும் ஒன்றாக இணைய நினைத்தோம் என்று கூறியவர் அவருக்கும் அரசுக்கும் திருமணம் நடந்ததையும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பேட்டியாளர் அரசு என்பவர் வேறு ஒருவருடைய கணவர் அவரை பிரிப்பது தான் உங்களுடைய சக்தியா தற்பொழுது உங்கள் கணவர் எங்கு இருக்கிறார் என்று கேட்டதுடன் கொஞ்சம் மழுப்பி பேசிய அன்னபூரணி அதன்பின் அவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என்று கூறினார். அதன் பின் விடாமல் பேட்டியாளர் கேட்க அவருக்கு என்ன ஆனது எப்படி இறந்தார் என்று கேட்க அதன்பின்தான் அன்னபூரணி பதிலளித்தார் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

அரசு என்பவர் வேறு ஒருவருடைய கணவர் அவரை பிரித்து திருமணம் செய்து கொண்ட நீங்கள் மாரடைப்பால் இறந்த உங்கள் கணவர் அரசு அவர்களை உங்கள் சக்தியால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று கேட்க ஒவ்வொருவரும் இந்த பூமியில் ஒரு வேலையை செய்வதற்காக தான் பிறந்தோம் அந்த சக்தி தான் நம்மள இயக்கிக் கொண்டிருக்கிறது அந்த வேலை முடிந்தவுடன் உடல் போய்விடும் என்று கூறியுள்ளார்
அன்னபூரணி.

பேட்டியாளர் அன்னபூரணி செய்வது தவறு தவறு செய்கிறீர்கள் என்பதை சுட்டிக் காட்டுவதற்கு முயற்சி செய்தாலும் அதனை கொஞ்சம் கூட காதில் வாங்காத அன்னபூரணி தன்னிடம் பெரிய சக்தி இருக்கிறது என்று தான் பேசி வந்தார் கடைசியில் பேட்டியாளர் உங்களை காவல்துறையில் தேடி வருகிறார்கள் தெரியுமா என்று கேட்டதற்கு நான் என்ன தவறு செய்தேன் வரச்சொல்லுங்கள் நான் ஓடி தலைமறைவாகவே இல்லை என் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார். தற்பொழுது அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பெரிய வைரலாகி வருகிறது.