இந்த வாரமும் பிக்பாஸில் ரம்யாகிருஷ்ணன்தான் !! மருத்துவமனையில் இருக்கும் கமலஹாசனின் நிலை இதுதான் !!

சினிமா நியூஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை இந்த வாரமும் நடிகை ரம்யாகிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் கொரோனா தொ ற் றினால் பாதிக்கப்பட்டு ம ரு த் துவமனையில் சி கி ச்சை பெற்று வரும் கமல்ஹாசனுக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதோடு, தனது பாணியில் போட்டியாளர்களை நன்றாக வறுத்தெடுத்தார்.

மேலும் கடந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்ட நிலையில், தாமரையை ரம்யாகிருஷ்ணன் அந்த அளவிற்கு புகழ்ந்தும் தள்ளினார்.

இந்நிலையில் தற்போது ம ரு த் துவமனையில் சி கி ச் சையில் இருக்கும் கமல்ஹாசனின் உடல்நிலையில் முன்னேற்றம் எற்பட்டாலும், அவருக்கு இன்னும் இருமல் குறையாமல் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இந்த வாரம் இருமல் குறைந்து கமல்ஹாசன் முழு நலம் பெறும் பட்சத்தில் அவர் மீண்டும் நிகழ்ச்சி தொகுப்பினை தொடங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இவருக்கு பதில் ரம்யாகிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.