இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு குட் பாய் சொன்னது இவர்தான் !! வெளியான பரபரப்பு தகவல் !! ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இமான் அண்ணாச்சி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் வருண் மற்றும் அபினய் குறைவான வாக்குகள் பெற்ற நிலையில், இன்ற அபினய் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம், யாருமே சற்றும் எதிர்பாராத போட்டியாளர்களின் ஒருவரான இமான் அண்ணாச்சி வெளியேறினார். இவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை கூற துவங்கி விட்டனர்.

இந்த வாரம் நாமினேஷனை சற்று வித்தியாசமாக பிக்பாஸ் நடத்தியுள்ளார். சில டாஸ்க்குகள் கொடுத்து தப்பிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில், சிபி, சஞ்சிவ், தாமரை, அமீர், நிரூப் ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனிலிருந்து தப்பித்தனர்.

இறுதியாக அபினய், பிரியங்கா, பாவனி, வருண், அக்ஷரா, ராஜு ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் எலிமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர்களில் வருண் மற்றும் அபினய் ஆகியோர் இருந்த நிலையில், அபினய் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்பொழுதும் எலிமினேஷனில் இறுதி வரை வந்து, தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்த அபினய் இந்த வாரம் வெளியேற உள்ளதாக வெளியாகிய நெட்டிசன்கள்களின் கணிப்பு உண்மையாகுமா என்பதை நாளைய தினத்தில் தெரிந்து கொள்ளலாம்.