இனி இவருக்கு பதில் இவர் தான்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்..!

Uncategorized

எப்போதும் விஜய் டிவி தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கமே. ஒரு தொடர் முடிந்த பின் மற்றொரு தொடர் சிறப்பாக மக்களின் வரவேற்பை பெரும். அப்படி, தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. ஆனந்தம் படம் தழுவலாக மளிகை கடை பின்னனியில் இந்த தொடர் உருவாகியுள்ளது.

மூர்த்தி, கதிர், ஜீவா, தானம் என்ற முக்கிய கதாபாத்திரங்களுடன் அண்ணன் – தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க பார்த்து வருகிறார்கள். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.

இதில் நடித்ததற்காக விஜய் டிவியின் சின்னத்திரை விருதுகளையும் இந்த தொடர் நட்சத்திரங்கள் வாங்கியுள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை. சில முறைகள் மட்டுமே நடிகை சித்ரா இறந்த போதும், மற்றொரு நடிகை தீபிகா விலகிய போதும் மற்றம் நடந்தது.

அந்த வகையில், தற்போது, புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார்.