இரண்டாம் திருமணம் செய்யப் போகிறாரா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு!

Uncategorized

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்சா, ராஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது


அதன் பிறகு வேறு ஒரு கதைக்களத்துடன் நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் நடிகர் செந்தில் மாயன், மாறன் என்ற இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மூலம் நடிகர் செந்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆயிரம் எபிசோடுகளை கடந்த இந்த தொடர் ஆரம்பம் முதல் முடிவும் வரை டிஆர்பியில் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வந்தது.

இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை தீபா. இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரிலேயே நடித்துள்ளார். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி, ஜீ தொலைக்காட்சியில் அன்பே சிவம் தொடரில் தீபா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. நடிகை தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மகனுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். நடிகை தீபா சாய் கணேஷ் பாபுவை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும், தீபா காதலர் சாய் கணேஷ் பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மை லவ் பாபு குறிப்பிட்டுள்ளார். சாய் கணேஷ் பாபு வீடியோ எடிட்டராக இருக்கிறார். இரண்டாவது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது