இரண்டாவதாக மீண்டும் கர்ப்பம் !! முக்கிய சீரியலில் இருந்து வெளியேறும் ஆல்யா மானசா ?? இவருக்கு பதிலாக யார் வரப்போகிறார் தெரியுமா ??

சினிமா நியூஸ்

ராஜா ராணி 2வது சீசன் சீரியலில் ஹீரோவாக சித்து நடிக்க அவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். இதே தொடரின் முதல் சீசன் மூலமாக தான் அவர் பாப்புலர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகளும் இருக்கிறார்.

சஞ்சீவ் தற்போது சன் டிவியில் கயல் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருப்பதாக சஞ்சீவ் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதனால் நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள்.

இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2ல் இருந்து வெளியேறுகிறார் என செய்தி பரவியது. ஏற்கனவே விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயின் மாறி இருக்கும் நிலையில் அடுத்து இந்த தொடரிலும் பெரிய மாற்றம் வருகிறதா என ரசிகர்களும் சற்று அ தி ர் ச்சியில் தான் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அது பற்றி விளக்கம் அளித்திருக்கும் ஆல்யா மானசா தான் ராஜா ராணி 2ல் இருந்து வெளியேறுவதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என கூறி இருக்கிறார்.