இரண்டு நாட்கள் மயக்கம் தெளியாமல் இருந்த திருநங்கை நமீதா !! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதானா ?? ஷா க் கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கு உண்மையான காரணத்தினை அவரே கூறியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுகளிடையே பிரபலமாகி வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு திருநங்கையான நமீதா மாரிமுத்து உள்ளே களம் இறங்கினார்.

உள்ளே சென்ற ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட இவர், திடீரென வெளியேறினார். இதற்கான காரணம் தெரியாமல் பலரும் பல விடயங்களைக் கூறிவந்தனர்.

தாமரையுடன் ஏற்பட்ட மோதல், கொரோனா, கதறியழுததால் ஏற்பட்ட மனஅழுத்தம் என்று கூறிவந்த நிலையில், தற்போது இதன் பின்னே இருக்கும் காரணத்தினை நமீதாவே கூறியுள்ளார்.

உண்மையில் நமீதா தீவிரமாக சாமி கும்பிடுவதில் ஆர்வமாக இருப்பதால் அதற்காக சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். இதனால் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு சுயநினைவு வந்தது என்றும் கூறியிருக்கிறார்.