உடற்பயிற்சி செய்யும் போது நடந்த அசம்பாவிதம் !! நொடிப்பொழுதில் உயிர்தப்பிய பிரபல நடிகரின் திக் திக் காட்சி !! வைரல் வீடியோ இதோ !!

சினிமா நியூஸ்

வெள்ளித்திரை சின்னத்திரை என நடிப்பில் கொடிகட்டி பறக்கும் பப்லு பிரித்திவிராஜ் உடற்பயிற்சி கூடத்தில் விபத்தில் சிக்கிய காணொளி அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.

பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் பிரித்திவிராஜை பெரும்பாலும் ரசிகர்கள் பப்லு என்றே அழைத்து வருகின்றனர்.

குழந்தை நடிகராக சினிமாவில் என்ட்ரியாக இவர், அஜித் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தில் வில்லனாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்த படத்தில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் வெறுப்பினை பெற்றதோடு பலரின் பேச்சுகளையும் வாங்கினார்.

தற்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் பப்லு கண்ணான கண்ணே என்ற சீரியலில் மோசமான தந்தையாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

சீரியலில் நடித்து வந்தாலும், தனது உடல் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பயிற்சியாளரின் கவனக்குறைவால் வெயிட் இவர் கழுத்தில் விழுந்துவிட்டது.

நொடிப்பொழுதில் இவர் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி கொண்டு இருக்கும்போது யாரும் பயப்பட வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)