எச்சரிக்கை !! யாருக்கு ஏழரை சனி ஆரம்பம் !! 2022 இல் கை நிறைய சம்பளத்தில் யாருக்கு நல்ல வேலை கிடைக்கும் ?? ராஜயோகம் யாருக்கு தெரியுமா ??

தமிழ் நியூஸ்

புத்தாண்டு பிறக்கப் போகிறது. 2022 ஆம் ஆண்டில் சில ராசிக்கு கை நிறைய சம்பளத்தில் வேலை தேடி வரப்போகின்றது.

எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் அரசு வேலை யாருக்கு கிடைக்கும் என்றும் இனி பார்க்கலாம்.

மேஷம்

சனிபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு பத்தாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்வதால் பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும்.

மிதுனம்

குருவின் பயணம் சனியின் சஞ்சாரம் சாதகமான பலனை தரப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. குருபகவான் அதிசாரமாக பயணிக்கும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.

கடகம்

குருவின் பயணமும் பார்வையும் சாதகத்தை கொடுக்கும். அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது.

சிம்மம்

குருவின் பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசி

மீனம்

உங்களுக்கு ஏழரை சனி காலம் ஆரம்பிக்கப் போகிறது.குரு கூடவே இருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்றாலும் ஆணவமும், தலைக்கனமும் இருந்தால் சனிபகவான் தட்டித்தான் வைப்பார் கவனம் தேவை.இதுநாள் வரை சம்பாதித்த பணத்தை எல்லாம் சனிபகவான் செலவு செய்ய வைப்பார்.சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

ராகு உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டிற்கும் வருவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைச் சச்சரவுகள் வரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

பண விசயங்களில் யாருக்கும் வாக்குக் கொடுத்து சிக்கிக்கொள்ள வேண்டாம். கவனமும் நிதானமும் தேவைப்படும் ஆண்டாக அமைந்துள்ளது.