எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !! விஜய் டிவி மைனா நந்தினி கலரானது இப்படித்தானாம் !! அட நம்மளும் ட்ரை பண்ணலாமே !!

சினிமா நியூஸ்

மைனா நந்தினி என்றவுடன் முதலில் தோன்றுவது அவரின் டஸ்கி ஸ்கின் டோன் தான்.மதுரைக்கார பொண்ணான நந்தினி தனது சினிமா பயணத்தை சின்னத்திரையில் தான் தொடங்கினார். மைனாவின் வட்டார மொழி பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒன்று .சில ஆண்டுகளுக்கு முன்பு மைனாவின் கணவர் த ற் கொ லை செய்து கொண்டார்.

இதில் மைனாவின் பெயர் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆனது. இருந்தும் மனம் களங்காத அவர் தொடர்ந்து சினிமா, ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு மைனா திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த நாதஸ்வரம் சீரியல், சரவணன் மீனாட்சி சீரியலில் இவரின் டஸ்கி ஸ்கின் டோன் மைனாவுக்கு பிளஸாகவே அமைந்தது. அதன் பின்பு வெள்ளித்திரையில் மேக்கப், கேமரா ஃபோக்கஸ் போன்ற பல காரணங்களால் அவரும் தனது நிறத்தை மெருகேற்ற பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

என்னதான் பியூட்டி பார்லர் சென்றாலும், அழகுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் உடலுக்கு உள்ளே என்ன செல்கிறது என்பது மிக மிக முக்கியம். இதில் ரிசல்ட் மெதுவாக கொடுத்தாலும் கிடைக்கும் பலன் உண்மையில் பிரமிப்பானது.

அப்படித்தான் மைனா நந்தினி தற்போது கலராகி அதற்கான சீக்ரெட்டையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். மைனா நந்தினி கொரோனா லாக்டவுனில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார். ’மைனா விங்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவார். அதில் ஒரு வீடியோவில் நான் எப்படி கலர் ஆனேன்? அதற்கு அவர் எடுத்த முயற்சியை காட்டியுள்ளார்.

ABC ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், கேரட், பீட்ருட் ஜூஸ் தான் நந்தினியின் கலர் மாற்றத்திற்கும் காரணமாக இருந்து இருக்கிறது. இதைப் பற்றி சமீப காலமாக பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் பேசி வருகின்றனர். இந்நிலையில் நந்தினி அதை எப்படி தயார் செய்கிறார் என்பதை அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.

தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதும் கலர் சேஞ்ச் ரிசல்ட் கிடைக்குமாம். இதில் எந்த செயற்கை கலவையும் இல்லாததால் தைரியமாக எல்லோரும் குடிக்கலாம் என்கிறார். என்னதான் நிறம் சினிமாவில் அவசியம் என்றாலும் மைனாவின் திறமையும் தான் அவரை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்பதை மறுத்திட முடியாது.