எவிக்‌ஷனை அறிவிக்காமல் திடீரென கிளம்பிய கமல் !! பாதியில் நிறுத்தப்பட்ட பிக் பாஸ் !! என்ன நடந்தது ?? அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

ஞாயிற்றுக் கிழமையான இன்றைய நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடைபெறாமல் நடிகர் கமல் பாதியிலேயே கிளம்பி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் கமல் கொரோனா சிகிச்சை முடிந்து நேரடியாக நேற்று பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான படப்பிடிப்பு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை தொடங்கி மாலைக்குள் ஒரே மூச்சாக முடிந்து விடும்.

ஆனால், இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடுக்கான படப்பிடிப்பு மாலை 5 மணிக்குத் தான் நிறைவு பெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு சரியான நிலையில், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக தொகுத்து வழங்க முடிவு செய்த கமல் ஈவிபி அரங்கத்திற்கு சென்றார்.

சனிக்கிழமை நிகழ்ச்சியை முடிக்கவே முடியாமல் சிரமப்பட்ட அவர் வழமைக்கு மாறாக அமர்ந்தப்படியே நிகழ்ச்சியை நடத்தியதை பார்த்து பிக் பாஸ் குழுவே கஷ்டப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமைக்கான படப்பிடிப்பை முடித்த நிலையில், கமல் தரப்பு ஓய்வெடுக்க கிளம்புவதாக அறிவித்ததும் பிக் பாஸ் ஞாயிற்றுக் கிழமையான இன்று காலை இதே போல வைத்து முடித்துக் கொள்ளலாம் என பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது.

இதனால் அங்கிருந்து உடனடியாக கமல் கிளம்பி சென்று விட்டதாக கூறுகின்றனர்.

கமல் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு பாதியில் கிளம்பி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய உடல் நலன் கருதி இந்த வாரம் படப்பிடிப்பை இரு பிரிவுகளாக நடத்தி கொள்ளலாம் என பிக் பாஸ் குழுவே முடிவு செய்து தான் சனிக்கிழமை படப்பிடிப்பை மட்டும் நேற்று நடத்தியதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில் இன்றைய நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு காலையில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. உண்மையில் உலநகநாயகனை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ரசிகர்களுக்காகவும், மக்களுக்காகவும் இப்படி தன்னை வறுத்தி கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார்.