தமிழில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பெரிய நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். 4 சீசன் வெற்றிகரமாக ஓடியதையடுத்து 5வது சீசனும் தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஓடுகிறது.
இத்தனை நாள் கடும் போட்டிகளால் போட்டிபோட்டு வந்தவர்கள் இப்போது சந்தோஷமாக இருந்து வருகின்றனர். காரணம் போட்டியாளர்களின் உறவினர்கள் எல்லோரும் வீட்டிற்குள் வருகின்றனர்.
இன்று காலை வந்த புரொமோவில் பாவ்னியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர், புரொமோ வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் அமீர் தனது சொந்த கதையை கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தார். இந்த நிலையில் அமீர் தனது தாயாருடன் இருப்பது போல் வரைந்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்து ரசிகர்கள் அழகிய புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram