சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த யாரடி நீ மோகினி சீரியல் ஹீரோயின்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துகள்!

Uncategorized

ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நக்சத்ரா. இந்த சீரியலில், ஹீரோ-வாக முதலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின் ஸ்ரீ நடித்து வந்தார். கதைப்படி, ஹீரோயின், வில்லி இருவருமே அவரை திருமணம் செய்ய ஆசைப்படுவர்

இந்த சீரியல் கதைக்காக பார்க்கப்பட்டதை தாண்டி, இதில் வில்லி ரோலில் நடித்த சைத்ராவிற்காக பார்த்த ரசிகர்கள் அதிகம். சைத்ரா இப்போது சண்டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியலில் கதானாயகியாக நடித்து வருகிறார்.

கதையில் இருவரும் நேருக்கு எதிராக இருந்தாலும், நிஜத்தில் இருவரும் இணைப் பிரியா தோழிகள். இவர்களுடன், செம்பருத்தி சீரியல் சபானா, பூவே பூச்சூடவா சீரியல் ரேஷ்மா நால்வரும் நட்புக்கே அழகனா வடிவம் கொடுத்தனர். அந்த அளவுக்கு நால்வரும் ஒற்றுமையாக இருந்தனர்.

கடந்த ஒரு வருடத்திளேயே, சைத்ராவில் ஆரம்பித்து சபானா, ரேஷ்மா அனைவரும் திருமணம் முடித்திருக்க, அந்த கேங்க்கில் சிங்கிளாக இருந்த நக்சத்ரா=வும் தற்போது திருமணத்தை முடித்துள்ளார். ஏற்கனவே அவர் ஒரு டாட்டூ ஆர்டிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும், அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பேமிலி என்று அறிமுகப்படுத்தியிருந்தார்.

 

அதைத் தொடர்ந்து இன்று தன்னுடைய திருமணப் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த ஜோடியின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள். +