சன் டிவி சீரியல் கயலும், சின்னம்மா-வும் ஒன்னு! என்னடா சொல்றீங்க? பரபரப்பான பதிவு உள்ளே!

Uncategorized

சீரியல் என்றாலே சன் டிவி தான் என்று சொல்லும் அளவுக்கு சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து முன்னனியில் இருப்பது சண்டிவி தான். அதன் பின் சீரியலில் காதல், காமெடி என மற்ற சேனல்கள் களத்தில் இறங்கிய போதும் கூட, எந்த சறுக்கல்களும் இல்லாமல், முதல் இடத்தை இப்போது வரை பிடித்து வைக்கிறது.

தமிழ் சீரியல்களில் டி.ஆர்.பி வரிசையில் முதலிடத்தில் இருப்பது சண்டிவி கயல் சீரியல் தான். இதில் கதானாயகியாக, சைத்ராவும், அவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ்வும் நடித்து வருகின்றனர். சீரியல் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலின் கதைப் படி, அப்பா இல்லாத குடும்பம், பொறுப்பில்லாத அண்ணன், ஹீரோயினுக்கு அடுத்து இருக்கும் தங்கை, தம்பி. இவளை மட்டுமே நம்பி இருக்கும் அம்மா என, மொத்த குடும்பத்தையும் கயல் தான் பார்த்துக் கொள்கிறார்.

இன்னிலையில், தங்கை காதலிப்பவனை கல்யாணம் செய்து வைக்க பெரிய சவால்கள் பலதை கடந்து வந்துள்ளார். இப்படியாக குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு பெண் தான் கயல். இப்படியான நிலையில், தி.மு.க சசிகலா-வின் சகோதரர் திவாகர், பேட்டியில் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

அது என்னவென்றால், கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ அது போல் தான் சின்னம்மா என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவை நடிகை சைத்ரா தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்ட் நெட்டீசன்களுக்கு அல்வா கிடைத்தது போல் பரவி வருகிறது.