சமீபத்தில் திருமணமான செம்பருத்தி ஷபானா ஆர்யன் விவாகரத்து செய்கிறார்களா ?? உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

கடந்த மாதம் தான் செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் அவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்றே கூறப்படுகிறது.

மிகவும் அவசர அவசரமாக நடைபெற்ற அவர்கள் திருமணத்தில் ஆர்யன் ஹிந்து முறைப்படி ஷபானா கழுத்தில் தாலி கட்டினார். திருமண விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையை தற்போது திருமணம் ஆகி சில மாதங்கள் ஆகும் நிலையில் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆர்யன் வீட்டில் அவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் இல்லை எனவும் ஷபானா அங்கு செல்லவே இல்லை என்றும் முன்னணி மீடியாவில் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹனிமூனில் இருந்து அவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு ஷபானா மிகவும் விரக்தி உடன் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை போட்டிருந்தார். அதுவும் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர்கள் இடையே என்ன தான் பிரச்சனை, பிரியப்போகிறார்களா அல்லது இதெல்லாம் வதந்தி என விளக்கம் சொல்ல போகிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.