சர்வைவரில் 1 கோடி வென்ற விஜி !! கடைசி நேரத்தில் இதற்காகத்தான் உமாபதியை முதுகில் குத்தினாரா ?? ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 கோடி பரிசை வாங்கிய விஜி, உமாபதியை முதுகில் குத்தினாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில், முதல் பைலிஸ்டாக சென்ற நிலையில், தன்னிடம் இருக்கும் பவரை பயன்படுத்தி இரண்டாவது பைனலிஸ்டை தெரிவு செய்ய கோரினர். உடனே விஜி வானேசாவை தெரிவு செய்தார்.

பின்பு மூன்றாவது இறுதி போட்டியாளருக்கு நடந்த டாஸ்கில் உமாபதி மற்றும் சரண் இருவரும் பங்கேற்ற நிலையில், சரண் வெற்றி வெற்றிபெற்று மூன்றாவது இறுதி போட்டியாளராக உள்ளே சென்றார்.

ஆனால் இதற்கிடையே விஜி, உமாபதியிடம் தான் இரண்டாவது இறுதி போட்டியாளராக உன்னை தான் தெரிவு செய்வேன் என்று வாக்குகொடுத்த நிலையில், இறுதி நேரத்தில் அதனை மாற்றியுள்ளார். இதனால் பெரும் அதிருப்தி அடைந்த உமாபதி, அடுத்து நடைபெற்ற மூன்றாவது இறுதி போட்டியாளர் டாஸ்கில் சரியாக விளையாடாமல் தோல்வியை அடைந்தார்.

இதனால் விஜியை நெட்டிசன்கள் பலரும் உமாபதி முதுகில் குத்தியதாக குறைகூறி வருவதுடன், உமாபதி ரசிகர்கள் திட்டித் தீர்க்கவும் செய்கின்றனர். இதற்கு தனது பக்க விளக்கத்தினை அளித்துள்ளார் விஜயலட்சுமி.

உமாபதி மீது எனக்கு எப்போதுமே பாசம் அதிகம் தான் அவரை ஏமாற்றி நான் வெற்றி பெறவில்லை. அவரை காப்பாற்றாமல் இன்னொருவரை காப்பாற்றினேன். ஆனால் அவருடைய முயற்சியால் மீண்டும் வந்து விடுவார் என்றுதான் நான் நம்பி இருந்தேன்.

ஆனால் உமாபதியின் முதுகில் நான் குற்றி விட்டேன் என்று பலர் கூறிவருகிறார்கள். கடைசி இரண்டு நாட்கள் நடந்தது வெளியில் அதிகமாக காட்டப்படவில்லை. என் மனதளவில் நான் இதுவரைக்கும் படாத கஷ்டங்களையும், அனுபவங்களையும் அந்த இரண்டு நாட்களில் அனுபவித்து விட்டேன்.

அதனால் தான் நான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன். என் பக்கத்து நியாயத்தை என்னுடைய ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று ரசிகர்களுக்காக பெரிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.