சற்றுமுன் கொ ரோ னாவால் பாதிக்கப்பட்ட பிரபல முன்னணி நடிகர் !! சர்வைவர் நிகழ்ச்சிதான் காரணமா ?? உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் நடிகர் அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அர்ஜூன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்த நிகழ்ச்சி கடந்த (13.12.21) நிறைவடைந்தது. இதில் விஜயலட்சுமி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

மேலும், என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்துவிட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.