சற்றுமுன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர் !! 12 லட்சத்தோட அப்போவே கிளம்பிருக்கலாம் !! இப்போ ஒன்னுமே இல்லாம போச்சு !!

சினிமா நியூஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தாமரை வெளியேறி இருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக வலம்வந்த தாமரை இந்த வாரம் வைக்கப்பட்ட பணத்தினைக் கூட எடுக்காமல் விளையாடினார்.

இந்த வாரம் எவிக்ஷனில் பாவனி நிரூப் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிரூப் நேற்றைய தினத்தில் இரண்டாவது பைனலிஸ்ட்டாக சென்றுள்ளார்.

ஆகவே இறுதியாக குறைந்த வாக்குகளைப் பெற்ற பாவனி இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமரையை வெளியேற்றியிருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ரிவியின் திட்டப்படி டாப் ஐந்து போட்டியாளர்களில் பாவனி, அமீர், பிரியங்கா, ராஜு, நிரூப் என்று உள்ளனர். ஆனால் மக்களின் மனதில் பாவனி நிரூப்பிற்கு பதிலாக தாமரை மற்றும் சிபி இருக்க வேண்டும் என்றே இருந்தது.

இந்நிலையில் சிபி பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதே போன்று இந்த வாரம் தாமரை வெளியேற்றப்படுவது பிரபல ரிவியின் ஏமாற்று வேலை என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.