சற்றுமுன் பிரபல பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு குழந்தை பிறந்தது !! இத்தனை நாளா சொல்லாம மறைச்சுட்டாரே !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாவது சீசனாக தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரவ் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கும் நடிகை ராஹி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஹி கர்ப்பமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஆரவ் மனைவி ராஹி ஆண் குழந்தை பெற்றுள்ளதாகவும் தாய், மகன் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தற்போது ’ராஜபீமா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.