டி.ஆர்.பிக்காக புது முயற்சியில் இறங்கியுள்ள விஜய் டிவி! இந்த பிளான் சரிவருமா?

Uncategorized

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தொடர்ந்து, தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு தொடர்களின் சுவாரசியம் சற்று குறைந்ததால், மீண்டும் டிஆர்பியை கொண்டு வர சேனல் நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இந்த இரண்டு, சீரியல்களையும் மெகா சங்கமமாக ஒளிபரப்ப, சேனல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இந்த மெகா சங்கமம் குறித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  உள்ளது.