தங்கச்சிக்காக த ற் கொ லை செய்து கொண்ட அண்ணன் !! இப்படியும் நடக்குமா ?? நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம் !!

தமிழ் நியூஸ்

கேரளாவில் தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்க்க முடியாமல் போனதால் அண்ணன் த ற் கொ லை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த தம்பதி வாசு- பேபி, இவர்களுக்கு விபின் என்ற மகனும், வித்யா என்ற மகளும் இருக்கின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாசு இ றந்துவிட, குடும்ப பொறுப்பை கவனித்து வந்துள்ளார் விபின்.

இந்நிலையில் வித்யா, நிதின் என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க கடந்த 12ம் தேதி திருமணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

காதல் திருமணம் என்பதால் வரதட்சணை வேண்டாமென நிதின் கூறிவிட, தங்கைக்கு தேவையான நகைகளை போட்டு பார்க்க வேண்டுமென விபின் ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் கேட்டுள்ளார். முதலில் கடன் தருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சகோதரிக்கு நகைகளை வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர், வங்கிக்குச் சென்று பணம் குறித்துக் கேட்டபோது வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த விபின் வீட்டிற்கு சென்று த ற் கொலை செய்துகொண்டார்.

வித்யாவும், பேபியும் கதறி அழ, நிதினின் குடும்பம் ஆறுதலாக இருந்துள்ளனர், இதற்கிடையே வித்யாவுக்கு, விபினின் ஆசைப்படியே உறவினர்கள் நகைகளை வாங்கி கொடுத்துள்ளனர்.

பின்னர் நிதின் – வித்யா திருமணம் கடந்த 29ஆம் தேதி திருச்சூரில் எளிமையான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.