தங்கள் 8-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நட்சத்திர ஜோடி! வைரல் வீடியோ! அச்சோ எவ்வளவு அழகு!

Uncategorized

சினிமா, ஹீரோ, ஹீரோயின்-களைப் போலவே, சீரியல் ஹீரோ, ஹீரோயின்-களுக்கும் மிகப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில், சீரியல் நடிக்கும் போதே ஒருத்தர் கொருத்தர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடி செந்தில்-ஸ்ரீஜா.

 

இவர்கள் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மதுரை சீரியல் மூலம் ஹீரோ-ஹீரோயின்-களாக அறிமுகமாகினர். அந்த சீரியலில், அவர்களின் கதாப்பாத்திரத்தின் பெயரைக் கொண்டு, அடுத்து சரவணன் மீனாட்சி சீரியல் எடுத்தனர். அதிலும் இருவருமே, ஜோடியாக நடித்தனர்.

அந்த சீரியல் முதல் ஐம்பதாவது எபிசோட்டிலேயே மக்கள் மத்தியில், குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்திருந்தது. வழக்கமான அழுகை சீரியலாக இல்லாமல், காதல், காமெடி என அனைத்தும் சிறப்பாக இருக்க, அந்த சீரியலில் நடித்த அனைவருமே, மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றனர்.

அதன் பின் சீரியல் முடிந்த பின், இருவரும் உண்மையிலையே திருப்பதியில் வைத்து திருமணமும் செய்துக் கொண்டனர். ரீல் சூப்பர் ஹிட் ஜோடி, நிஜத்திலும் திருமணம் செய்துக் கொண்டதில் ரசிகர்களுக்கு சொல்ல முடியா மகிழ்ச்சியைக் கொடுத்தது.

திருமணம் முடித்தப் பின், இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை என்ற சீரியல் நடித்தனர். அந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேறபை பெற்றது. அந்த சீரியலின் முடிவுக்கு பின், ஸ்ரீஜா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.

இப்படியான நிலையில் செந்தில் மட்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் இந்த நட்சத்திர ஜோடிக்கு 8-வது திருமண நாள் வந்தது. அந்த திருமண நாளை முன்னிட்டு, “என்னுடைய இறைவி” என்ற தலைப்பில் செந்தில் அவர்களின் திருமண நாள் கொண்டாட்ட வீடியோ-வை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.