தன் மனைவியுடன் விக்கி-நயன்தாரா திருமணத்துக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி! சினிமா நட்சத்திரங்களுடன் ஜொலித்த திருமணப் புகைப்படங்கள் வைரல்!

Uncategorized

அதென்னவோ? நம் பக்கத்து வீட்டில் திருமணம் நடந்தால் கூட, முகூர்த்தத்திற்கு சென்று விட்டு, திரும்பி விடுகிறோம். ஏன் அதைப் பற்றியே மறந்து விடுகிறோம். ஆனால், சினிமா நட்சத்திரங்களின் திருமணம் என்றால், அதைப் பற்றிய செய்திகளை கூட நாம் ஆர்வமாக பார்க்கிறோம். இவ்வளவுக்கும் நாம் அந்த திருமணத்திற்கு செல்வது கூட இல்லை.

ஆனாலும் கூட, சினிமா நட்சத்திரங்கள் யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது. அதைத்தான் மீடியாக்களும், பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருமணம் தான் நயந்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம்.

ஏழு வருடங்களாக, காதலர்களாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்கள், கடந்த மாதம் தான் திருமணம் செய்துக் கொண்டனர். பல கோடிகளுக்கு மேலாக செலவு செய்த திருமணத்தை பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடுவதாகவும் இருக்கின்றார்கள். அதை கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.

அதற்கு மேலும், அந்த திருமணத்துக்கு, எக்க சக்க நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ளனர். சூப்பர் ஸ்டாரில் ஆரம்பித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வரை கலந்துள்ளனர். அதிலும் எவர் கிரீன் ஜோடியாக வலம் வரும் சூர்யா-ஜோதிகாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து அதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

பெரும்பாலும், தன்னுடைய பர்ஷனல், புரோபசனலை, மிக்ஸ் செய்யாத நடிகர் விஜய் சேதுபதியும், அவருடைய மனைவியுடன் ஜோடியாக கலந்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை, விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.