தாலி கட்டும்போது வேணாம்ன்னு சொன்ன மணப்பெண் !! டிபன் சாப்பாட்டை வீணாக்காமல் செய்த வேலை !! இப்படி ஒரு சம்பவமா ??

சினிமா நியூஸ்

வேலூர் மாவட்டம் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சண்முகப்பிரியா. இவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 31 வயதான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், நேற்று பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு பாட்டுக் கச்சேரி, விருந்துடன் வரவேற்பு நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென மணப்பெண் காலை, 6:00 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரை அழைத்து தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இரு தரப்பினரும், கல்யாண பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மணப்பெண் தொடர்ந்து, “இந்த திருமணத்தில் விருப்பமில்லை, மாப்பிள்ளையையும் பிடிக்கவில்லை, என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் நான் த ற் கொ லை செய்து கொள்வேன்” என மி ர ட்டல் விடுத்து, தாலியை தூக்கி வீசியுள்ளார்.

இதையடுத்து, இரு வீட்டாரும் தனது சொந்தக்காரர்களிடம் மன்னிப்பு தெரிவித்து திருமணம் நின்றுவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காலை டிபன் வீணாகி விடும் என்ற காரணத்திற்காக இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டதால் உறவினர்கள் காலை டிபனை மட்டும் சாப்பிட்டுவிட்டு சோகத்துடன் மண்டபத்தை காலி செய்து சென்றுள்ளனர்.