திடீரென தன் காதலை வெளிப்படையாக கூறிய பாவனி! அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

Uncategorized

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை 3 மாதத்தில் முடிவடைந்தது. பவானியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்,

அதற்குப்பிறகு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவானி அங்கு அமீருடன் சற்று நெருக்கம் காட்டி பழக ஆரம்பித்தார். அப்போது ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதல் செய்கின்றனர் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என சர்ச்சையைக் கிளப்பி விட்டனர். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி அதை உறுதி செய்யும் விதமாக நடந்து கொள்கின்றனர்.

இவர்களின் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. தற்போது பிக் பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

இன்னிலையில் அமீரின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்துடன், தன் காதலையும் பகிர்ந்த பாவனி. அந்தப் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.