திருமணத்தை இதுக்குதான் மறைச்சு வெச்சேன் !! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இசைவாணி !! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா ??

சினிமா நியூஸ்

தமிழில் ஒளிபரப்பாகும் ஐந்தாவது சீசன் பிக் பாஸ் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.ஆரம்பத்தில் மிக பொறுமையாக சென்றாலும் தற்போது மக்களுக்கு மிகவும் பிடித்தவகையில் சென்றுகொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக இசைவாணி வெளியேறினார்.இவருக்கு பல ரசிகர்களும் இவரை படிக்காதவர்கள் பலரும் இருந்தனர்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சவால்களை கூறியபோது இசைவாணி தன்னுடைய திருமணத்தையும் விவாகரத்தையும் மறைத்துவிட்டதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டிய நிலையில் இதுகுறித்து இசைவாணி தற்போது விளக்கமளித்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய இசைவாணி 49வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு திருமணமானதை மறைத்து ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

என்னுடிய திருமணத்தை திட்டமிட்டு மறைத்து விட்டதாக பலர் குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் நான் அதை தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வர விரும்பவில்லை.

என்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என்று நினைத்ததால் நான் அதைப் பற்றி பேசவில்லை என்று கூறினார்.