நீங்கள் இல்லாமல் என்ன செய்வேன் ?? விவாகரத்துக்கு பின் யாரை நினைத்து இந்த பதிவை சமந்தா போட்டுள்ளார் தெரியுமா ?? குழப்பத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதை களத்தில் 2 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் இணையத்தின் சென்சேஷன் ஆக மாறியுள்ளது.

இப்பாடலுக்கு பலர் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வெளியிட்டு வருகின்றனர். மேலும், பலர் இப்பாடலின் டியூனுக்கு புது வரிகள் எழுதி பாடி இப்பாடலுக்கான மவுசை கூட்டிவருகின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா நடிகர்கள் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?” எனக் கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.