பகல் ஆனா சத்தம் போடுறாங்க !! நைட்டு ஆனா முத்தம் கொடுக்குறாங்க !! புதுசா முத்தம் கொடுத்து மீண்டும் மாட்டிய ஜோடி !! வைரல் வீடியோ !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது ரூல்.

இந்த தலைவர் போட்டிக்காக போட்டியாளர்களுக்கு ஒரு கயிறு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் முதல் பஸ்ஸர் சத்தம் கேட்டதும் அனைவரும் கொடுக்கப்பட்ட கயிற்றை ஒன்றாக பிடிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் யாரும் அந்த கயிற்றில் இருந்து கையை எடுக்க கூடாது.

அப்படி அந்த கயிற்றில் இருந்து கையை எடுக்கும் நபர்கள், இந்த தலைவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். கடைசி வரைக்கும் தங்கள் கைகளில் இருந்து கயிறை எடுக்காமல் இருக்கும் அந்த ஒரு நபர் பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில், இந்த கயிற்றைப் பிடித்து, அனைவரும் சோபாவில் அமர்ந்தும், தூங்கியும் இருந்து கொண்டிருந்தபோது, அக்‌ஷரா, வருணிடம், “வெளியே போயிட்டு என்ன செய்யப் போற?” என கேட்கிறார். அதற்கு வருண், ஹஸ்கி வாய்சில் , ‘வெளில போயா?’என கேட்கிறார். அதற்குள் பஸ்ஸர் அடித்து பாவனி வெளியேற்றபட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, அக்‌ஷரா, தூங்கிக் கொண்டிருக்கும் வருணை எழுப்பி, “நான் கயிற்றை விட்டு செல்ல போகிறேன்!” என கூறிவிட்டு கயிற்றை விட்டுவிட்டு புறப்பட தயாராகிறார். அப்போது வருணின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் அமீர், பாவனியை ஒரு விஷயம் சொல்வதாக அருகே அழைத்து, பாவனிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.