பணத்தாசையால் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறினாரா தாமரை ?? நிரூப் செய்த காரியம் !! சூடுபறக்கும் பிக் பாஸ் !!

சினிமா நியூஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

இதுவரை நடந்த 4 சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேறி உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் இன்று அந்த பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெட்டி மட்டுமே அனுப்பப்படும், ஆனால் இந்த முறை பெட்டியுடன் நடிகர் சரத்குமாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

இந்நிலையில், இன்று 9 லட்ச ரூபாய் பணம் வைக்கப்பட்ட பிறகு தாமரை அதனை எடுத்துக்கொண்டு நடையை கட்டிவிட்டார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.