பணப்பெட்டி டாஸ்க்கில் இறுதியில் அடித்த ட்விஸ்ட் !! அமீர் வெளியேறவில்லை !! எதிர்பாராத விதமாக பணப்பெட்டியை தூக்கிய அந்த நபர் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியப் போகிறது.

இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர், இதில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேறிவிடுவார், இதுவரை குறைந்த வாக்குகளுடன் தாமரை மற்றும் பாவ்னி உள்ளார்கள்.

இவர்கள் வெளியேறுவார்களா அல்லது வேறு ஏதாவது டுவிஸ்ட் பிக்பாஸ் வைத்துள்ளாரா என்பது தெரியவில்லை. இன்று காலை வந்துள்ள புரொமோவில் அமீர் ரூ. 11 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று கூறுகிறார்.

ஆனால் உண்மையில் வீட்டைவிட்டு வெளியேறியது சிபி தானாம். அவர் ரூ. 12 லட்சத்துடன் பிக்பாஸை விட்டு வெளியேறி இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் நன்கு விளையாடிய ஒரு போட்டியாளர் இவர் பைனல் வரை இருந்திருக்கலாமே என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.