பிக்பாஸ் பஞ்சாயத்து !! பாவனியால் அபிநய் வீட்டில் வெடித்த பிரச்சினை !! மனைவியை பிரிகிறாரா அபிநய் !! ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது இறுதிகட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. யார் இறுதிவரையில் செல்வார் யார் வெளியேறப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, பிக்பாஸ் கலந்துகொண்டு வெளியேறிய அபிநய், வீட்டில் இருந்தபோது பாவனி மீது ஈர்ப்பு ஏற்பட்டு என்னை லவ் பண்றியானு பாவனியே அபிநய்யை பார்த்து கேட்டார்

அதன் பின்னர் அபிநய் மீது தனக்கு ஃபீலிங் இருப்பதாக பாவனியும் தெரிவித்தார். பின் இருவருமிடையே பிரச்சினை வெடித்து ஆஃப் ஆனது, தற்போது பாவனியை அமீர் தூரத்தி வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அபிநய் செய்த செயலால், அபினய் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

மேலும், அவரது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் பெயருக்கு பின்னால் இருந்த அபிநய்யின் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என ஏற்கனவே மாற்றியிருந்தார்..

இந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்த்ள்ளதாகவும், இதனால் அபர்ணாவும், அபிநய்யும் விவாகரத்து பெறப் போவதாக பேசப்படுகிறது.