பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நண்பனுக்காக நடிகர் விஜய் அனுப்பிய மெசேஜ் !! சந்தோசத்தின் உச்சத்தில் சஞ்சீவின் மனைவி !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆனது 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில், உறவினர்களின் வருகையால் களைகட்டி வருகிறது. ஒரு பக்கம் போட்டியாளர்கள் வெளியே சென்றாலும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது.

இதனிடையே, வைல்ட் கார்ட் என் ட்ரியாக நுழைந்த நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் கலந்துகொண்டதில் இருந்தே சஞ்சீவ் மனைவி அவருக்கு ஆறுதலாக பல போஸ்ட்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஒவ்வொரு போஸ்டிலுமே தன்னுடைய கணவரை மை பாஸ் என் அழைத்து பதிவேற்றி வருகிறார். மேலும், ஒவ்வொரு முறை சஞ்சீவ் நாமினேஷனில் வரும்போது எல்லாம் சஞ்சீவியின் மனைவி நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் சஞ்சீவ்க்கு ஓட்டு அளிக்குமாறு மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கிறாராம்.

அப்படி, நடிகர் விஜய்க்கும் அனுப்பும்போது “விஜய் நான் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் ஏற்கனவே வாக்கு அளித்து விட்டேன்” என்று கூறியிருக்கிறாராம்.

விஜய் வாக்களித்ததால் அவருடைய ரசிகர்களும் சஞ்சீவ்க்கு தான் வாக்களிப்பார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் ஸ்ட்ராங்காக இருந்தாலுமே, ராஜூ தான் இறுதி வரை வர டஃப் போட்டியாளர் என ரசிகர்கள் கூற அதே அளவுக்கு சஞ்சீவ் வருவார் என கூறுகின்றனர்.

எப்படி இருந்தாலும், இனி வரும் நாட்களை பொறுத்து தான் போட்டியாளர்களின் உண்மை முகம் தெரியவரும் என கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)