பிக் பாஸ் உள்ளே வந்தது தாமரையின் இரண்டாவது கணவர்ன்னு உங்களுக்கு தெரியுமா ?? அவர் என்ன தொழில் செய்கிறார்ன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் தாமரையின் கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் தாமரை தனது கடந்த கால வாழ்க்கையை தெரிவித்திருந்தார்.

முதல் கணவர் செய்த கொடுமையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்து விட்டதாகவும், அதன்பின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனது மாமியார் தன்னை மகள் போல் பார்த்து கொண்டதாகவும் கூறினார்.

இருப்பினும் தனது மகனை முதல் கணவரின் குடும்பத்தினர் தன்னுடன் சேரவிடவில்லை என்றும் எனது மகனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவர் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று தாமரை மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அடுத்து தாமரை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அதுமட்டுமின்றி தாமரையின் கணவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹீரோ இனிகோ போல இருக்காரே என கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் தாமரையின் கணவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.