பிக் பாஸ் கொடுக்கும் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் இவர்தான் !! வெளிவந்த உறுதியான தகவல் !! உச்சக்கட்ட ஷா க் கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சஞ்சீவ் வெளியேறும் நிலையில், இனி நடக்கும் டாஸ்கில் பயங்கர டுவிஸ்ட் இருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஆரம்பமாகியதுடன், போட்டியாளர்களின் பலரின் சுயரூபமும் வெளிவந்தது. இந்நிலையில் இந்த டிக்கெட்டினை அமீர் நன்றாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.

இதன் பின்பு இன்றைய நாமிநேஷனில் இறுதியில் சஞ்சிவ், சிபி இவர்கள் காணப்பட்ட நிலையில், இதில் சஞ்சீவ் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியே கசிந்துள்ளது.

தற்போது வரும் வாரத்தில் பிக்பாஸ் வழக்கம் போல் 5 லட்சம் ரூபாய் ஆஃபர் கொண்ட டாஸ்க் கொடுக்கப்படும். இதில் கவின் மற்றும் கடந்த சீசனில் கேப்ரில்லா 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் இந்த ஐந்து லட்சத்தினை எடுத்துக்கொண்டு எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகமாக எகிறியுள்ளது.

தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவலின் அடிப்படையில் தாமரை இந்த ஐந்து லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

நெட்டிசன்களும் தாமரையே ஐந்து லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றார் என்று ஆணித்திரமாக கூறியுள்ளனர்.