மறைந்த வடிவேல் பாலாஜி-யை கண் முன் கொண்டு வந்த அமுதவாணன்! வெளியான அசத்தல் புரோமா!

Uncategorized

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

அந்தளவிற்கு பல திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.இந்த விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் அது இது எது,இந்த நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற சுற்றில் நகைச்சுவை செய்ய ஒருவர் வந்து அனைவரையும் சிரிக்க வைப்பார்,அதில் மக்களிடம் அறிமுகமாகி வரவேற்பினை பெற்றவர் தான் வடிவேல் பாலாஜி

2008 ஆம் ஆண்டு கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் வடிவேல் பாலாஜி.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு வெற்றிகிட்டவில்லை.கடினமாக உழைத்தார் .இதன்மூலம் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி மக்களை சிரிக்க வைத்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் வடிவேல் பாலாஜி நெஞ்சு வலியால் 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார்.இது பெரும் சோகத்தினை ரசிகர்களுக்கும் திரை உலகினருக்கும் ஏற்படுத்தியது.நல்ல கலைஞரை திரை உலகம் இழந்துவிட்டது என்று தான் கூறவேண்டும்

.இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜி போல் வேடமிட்டு வந்து அமுதவாணன் அவரை போல் அப்படியே பேசி நடித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் தேம்பி அழுதுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது