விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் ஏற்கனவே அதே தொலைக்காட்சியில் மதுரை என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜேவாகவும் பணியாற்றி வருகிறார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. இவர் கேரளா-வை சேர்ந்தவர், தமிழில், மதுரை சீரியல் மூலம் அறிமுகமானார். சீரியல் நடிக்கும் போதே இருவரின் ஜோடி மக்கள் மத்தியில் மிகப் பெரிய இடத்தை பிடித்திருந்தது.
சீரியல் நடித்து முடித்த பின், ரசிகர்களின் ஆசைப்படி, இருவரும் நிஜத்திலேயே திருமணமும் செய்துக் கொண்டனர். அதன் பின் இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை என்ற தொடரில் நடித்தனர். அது போக, கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் சீரிஸீலும் நடித்தனர்.
View this post on Instagram
அதன் பின் செந்தில் மட்டும் விஜய் டிவியில், ஒளிப்பரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டு சீசன் களிலும், இரட்டை வேடத்தில் நடித்தார் இன்னிலையில் மிர்ச்சி செந்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பிளஸ் டூ முடித்த ஏழை மாணவர்கள் கல்லூரியில் சேர பணம் இல்லை என்றால், அவருக்கு உதவி செய்ய நிறுவனம் உள்ளதாகவும், ஒரு வாட்ஸப் நம்பரையும் கூறியுள்ளார்.
னீங்களும் அந்த வீடியோ-வை பார்த்து விட்டு, உதவி தேவைப்படுவர்களுக்கு பகிரவும்…