மீண்டும் சீரியலுக்கு வந்த ஆர்யன்! ஹீரோயின் யார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Uncategorized

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஆர்யன். அந்த சீரியலின் முடிவுக்கு பின், பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

அவர் சீரியல் நடிக்கும் சமயத்தில் தான், இவரும், செம்பருத்தி சீரியல் நடிகை சபானா-வும், காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அதைத் தொடர்ந்து இருவரும் அதை சமூக வலை தளங்கள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன், பெற்றோர்கள் சம்மத்மின்றி நண்பர்களின் உதவியுடன் திருமணமும் செய்துக் கொண்டனர். அதன் பின், நடிகர் ஆர்யன், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார்.

அதற்கான காரணம் சொல்லப்படாவிட்டாலும், நிச்சயமாக வேறு சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இன்னிலையில். ஜிதமிழில் புதிதாக ஒளிப்பரப்பாக போகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)

அந்த சீரியலின் புரோமோவும் இப்போது வெளியாகியுள்ளது.