முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ?? இது என்னப்பா புது ட்விஸ்ட்டு !! வெளியான வீடியோ !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பாரதி கண்ணம்மா சீரியல் தான் தற்போதைக்கு டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கிறது. கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவரை கண்ணம்மாவாக்கி இருக்கிறார்கள்.

கண்ணம்மாவை மாற்றுவதற்கு பதிலாக சீரியலை முடித்திருக்கலாம் என நெட்டிசன்கள் அப்போதே கருத்து கூறினார்கள். இருப்பினும் புது கண்ணம்மா உடன் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் சீரியலில் பல்வேறு திருப்பங்களும் வந்து கொண்டிருக்கிறது.

வெண்பாவின் உண்மை முகம் பாரதிக்கு தெரிய வந்திருக்கிறது, மேலும் கோர்ட் தீர்ப்பை ஏற்று பாரதி கண்ணம்மா வீட்டுக்கு சென்று தங்க முடிவெடுத்து இருப்பதும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

இதெல்லாம் சீரியல் விரைவில் முடியப்போகிறது என்பதற்காக அறிகுறிகள் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத் தற்போது ஷிம்லாவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

அவர் ஹோட்டல் முன்பு டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு “நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நானாக இருக்கிறேன். பாரதியை மறந்துவிட்டு, இப்போது அருணாக இருக்கிறேன்” என கூறி உள்ளார்.

அது மட்டுமின்றி அவரது கெட்டப்பையும் மாற்றி இருக்கிறார். சீரியலில் தாடி மீசை உடன் தான் அவர் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் அதை எடுத்துவிட்டு புது கெட்டப்புக்கு மாறி இருக்கிறார்.

அருண் பிரசாத்தின் வீடியோவில் இதை எல்லாம் பார்த்த நெட்டிசன்கள். அப்போ பாரதி கண்ணம்மா முடிஞ்சு போச்சா? என கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)