முதன் முதலாக தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பிரபு தேவா! அச்சு அசலாக அப்படியே அப்பா மாதிரி.

Uncategorized

பிரபு தேவா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான பொன்மாணிக்க வேல்,  தேள் ஆகிய படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தன. தற்போது பகீரா, பொய்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களில் பிரபு தேவா நடித்துவருகிறார்

இதில் மை டியர் பூதம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் பிரபு தேவா பூதமாக நடித்துள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, என்.ராகவன் இயக்கியுள்ளார்

இந்த நிலையில் நடிகர் பிரபு தேவா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பாண்டு தனது மகனை ஆசிர்வதிக்கும் படத்தைப் பகிர்ந்து, உங்களை நான் நேற்று மாலையிலிருந்து நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் எனக் குறிப்பிட்டுள்ளார்

நடிகர் பிரபு தேவா மற்றும் பாண்டு இணைந்து நடித்த நினைவிருக்கும் வரை, டைம், ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதைத் தொட்டு, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன

இதன் ஒரு பகுதியாக  நடிகர் பிரபு தேவா பகிர்ந்த படத்தில் அவரது மகன் தாடியுடன் இருக்கிறார். இதனையடுத்து அவரது மகன் காதலன் பட பிரபு தேவாவை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்