யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற முக்கிய போட்டியாளர் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் 5ல் இருந்து இது வரை 10 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி உட்பட இன்னும் 10 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

நேற்று திங்கட்கிழமை இந்த புதிய வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் மொத்தம் ஆறு பேர் நாமினேட் ஆனார்கள். கடந்த வாரம் அபினை எலிமினேட் ஆன நிலையில் தற்போது அமீர் உடன் நெருங்கி பழகி வரும் பாவனி தான் டார்கெட் செய்யப்பட்டார்.

பாவனி, பிரியங்கா, நிரூப், சிபி, அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் தான் நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். இதில் இந்த வாரம் யார் வெளியே போக போவது என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது வாக்கெடுப்பில் பாவனி தான் பின்தங்கி இருக்கிறார் என தெரிகிறது. பிரியங்கா தான் அதிகம் வாக்குகள் பெற்று இருக்கிறார். அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு விவரம் தான் என்றாலும் இது தான் தற்போது ரசிகர்களின் மனநிலையாக இருந்து வருகிறது.

இது வரும் நாட்களில் மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இறுதியில் வெளியே போக போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.