வதந்திகளை பரப்ப வேண்டாம்! நடிகர் விக்ரமின் தற்போதைய உடல் நிலை இது தான்! அறிக்கை வெளியீடு!

Uncategorized

தென்னிந்தியாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விக்ரம். விக்ரம் என்றாலே கடின உழைப்பு என்று அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நடிப்புக்காக, பல கஷ்டங்களை தாங்கியுள்ளார். அதனாலயே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அது போக, அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.அது போக ரசிகர்கள் பலர் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாக இருந்த நிலையில்,  திடீரென நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஊடகங்கள் பல, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பி வந்தனர். இன்னிலையில், சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சீயான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி இருந்தது, அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிக்கைகள் தவறாகக் கூறுவதுபோல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.

இந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான தனிமையை தாருங்கள். நமது அன்பான சீயான் இப்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும், பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.