விஜய் படத்தில் மீண்டும் நடிக்கவரும் நடிகர் விஜயகாந்த் !! அதுவும் எந்த படத்தில் தெரியுமா ?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

நடிகர் விஜயகாந்திற்கு அறிமுகமே தேவை இல்லை.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர்க்கும் பிடித்தமான ஒரு நடிகராக இருந்தவர்.கதாநாயக பல ஹிட் படங்களை கொடுத்த இவர் பின் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.

இனிக்கும் இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, வெற்றி என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.மேலும், இவர் நடிப்பில் வெளியான, ஊமை விழிகள், ரமணா, சத்திரியன், ஆனெஸ்ட் ராஜ் உள்ளிட்ட பல படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது.

அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலகினார். ஆனாலும் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு தான் இருந்தார்.

ஆனால் அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக சினிமாவில் நடிப்பதை இருத்திவிட்டார்.நடிகர் விஜய் ஆன்டனி தற்போது விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, நடிகர் விஜயகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.