வில்லியாக மாறப் போகிறாரா ராதிகா? பாக்கியாவுக்கு புது ஜோடி யார்? வரப்போகும் டிவிஸ்ட்!

Uncategorized

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா இனி இந்த வீட்டில் ஒரு ஏமாளியா இருக்க மாட்டேன் என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிட்டார். செல்வியும் எழிலும் அவருடன் பின்னாடியே செல்ல இந்த பக்கம் கோபி அதிர்ச்சி அப்படியே நின்று கொண்டிருக்க இனிய ஒரு பக்கம் அழ செழியன் உங்ககிட்ட இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை என சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி ஊரெல்லாம் உன்ன பத்தி பெருமையா பேசி இருந்தேன் ஆனா நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்ப பாக்கியா வீட்டை விட்டு போயிட்டா திரும்ப வருவாளா கூட தெரியல. இந்த கருமத்தை எல்லாம் பார்க்க நாங்க எதுக்கு உயிரோட இருக்கணும் என ஒரு பக்கம் அழ இனியா அம்மாவும் போய்ட்டாங்க நீங்களும் போய்ட்டா நான் என்ன பண்ணுவேன் என அழுகிறார். அம்மா இல்லாத வீட்டில் நான் இருக்க மாட்டேன் நானும் எங்கேயாவது போயிடுவேன் என கூறுகிறார்.

பாக்கியா அப்படியே நடந்து சமைக்கும் இடத்திற்கு சென்று விட்டு அங்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க செல்வி எதையாவது பேசுகா இப்படி இருக்காத என கோபி பற்றி சொன்னதெல்லாம் நீ கேட்கல இன்னைக்கு எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாரு என புலம்புகிறார்.

 

ராதிகா மயூவின் ஸ்கூலில் டிசி வாங்க கிளம்ப அப்போது அவருடைய அண்ணனும் அம்மாவும் கோபி பாக்கியா தான் மனைவி என்பதை தவிர வேறு என்ன தப்பு செய்தார்? ஒரு பிரச்சனையிலிருந்து ஓடி ஒளிஞ்சி இன்னொரு பிரச்சனை கோபி செய்ததை மறந்து அவருடன் சேர்ந்து வாழ்ந்த எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என அறிவுரை கூறுகின்றனர். இதனால் ராதிகா எடுக்க போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்போடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.