வீட்டை விட்டு வெளியேறிய பாக்யா! பரபரப்பின் உச்சக்கட்டம்! அடுத்து வரப் போகும் டிவிஸ்ட் இது தான்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Uncategorized

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியல்களில் முக்கியமான ஒன்று பாக்கியலட்சுமி.  காதல், குடும்பம் இவைகளைத் தாண்டி, இல்லத்தரசிகளின் வாழ்க்கையை அப்பட்டமாக சொல்வதால், இந்த சீரியலுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால், இந்த காலத்திலும் இப்படித்தான் மனைவியை நடத்துகிறார்களா? என்ற சந்தேகம் கூட பலருக்கு வருகிறது.

அதே போல், இதில் கோபி குடும்பத்திற்காக பாக்கியாவை திருமணம் செய்துக் கொண்டு, ராதிகா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இதில் பாக்கியாவிற்கும், கோபிக்கும் இரண்டு மகன்-கள், ஒரு பெண் இருக்கின்றனர். பேத்திகள் பிறக்கப் போகும் சமயத்தில், கோபி ராதிகா-வை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது நெட்டீசன்-கள் வச்சி செய்வதற்கு மிக முக்கிய காரணம்.

அதையெல்லாம் தாண்டி, எப்போது தான் கோபியைப் பற்றிய உண்மை கோபிக்கு தெரியவரும்? என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், கோபியைப் பற்றிய உண்மையை பாக்யா அறிந்துக் கொண்டார்.

 

அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல, கோபியின் அம்மா நம்பவில்லை. இன்னிலையில் இப்போது வெளியான புரோமோவில், பாக்கியா கோபியை மிரட்டி, நீ எப்படி வாழனும்மோ வாழு. நான் வீட்டை விட்டு வெளியப் போறேன்னு சொல்லிட்டு கிளம்புறாங்க. இது ஒரு பெங்காலி சீரியலோட டப்பிங் வெர்சன் தான். ஹிந்தியில அனுபாமா என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதன் பின் ஹிந்தி சீரியலில், பாக்கியாவை பள்ளி காலத்தில் இருந்து ஒரு தலையாக காதலித்த, அவளுடைய நண்பன் வருவார். அவருடன் தான் பாக்கியாவிற்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அந்த காட்சிகள், தமிழில் எப்படி வரப் போகிறது? யார் நடிக்கப் போகிறார்கள்? அது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.