வீரமரணம் அடைந்த அண்ணன் இல்லாத குறையை போக்கி தங்கையின் திருமணத்தை நடத்திய ராணுவ வீரர்கள் !! மெய்சிலிர்க்கவைத்த சம்பவம் இதோ !!

தமிழ் நியூஸ்

மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றியவர் கான்ஸ்டபிள் சைலேந்திர பிரதாப்சிங். இவர் கடந்த வருடம் 5.10.2020 அன்று புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தார். வீட்டில் திருமணம் என்றாலே அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை முன்னின்று நடத்திய சக ராணுவ வீரர்கள். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மறைந்த ராணுவ வீரருடன் பணியாற்றிய சக வீரர்கள் அனைவரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டு தங்கைக்கு “மூத்த அண்ணன்களாக” இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளன. 2008 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் வீரராக பணியில் சேர்ந்த பிரதாப் 110 பெடாலியனில் சேர்ந்து பணியாற்றினார்.

கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலில் போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பிரதாப்பின் தங்கைக்கு திருமணம் என்று அறிந்தபின் வீரர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது பலரும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.