2022 இல் நுழையும் குரு !! வக்கிரம் அடையும் சனி !! எந்த ராசிக்கு பாதிப்பு தெரியுமா ?? இந்த ராசியெல்லாம் கொஞ்சம் பார்த்து இருங்க !!

தமிழ் நியூஸ்

இந்த மாதம் மூன்று கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன.புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசியில் சனியோடு இருக்கும் சுக்கிரன் வக்கிரம் அடைகிறார்.

நவகிரகங்களின் கூட்டணியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

குரு பலன் கிடைப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்கிறார்.

தொழில் உத்தியோகம் சிறப்படையும், செயல்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு உண்டாகும்.

இந்த மாதம் நல்ல மாதம் வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்

வேலையில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தான பழைய வீடு உங்கள் பங்குக்கு கிடைக்கும்.

ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும்.

மிதுனம்

குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்

சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும் இருப்பினும் உத்தியோகத்தில் மன உளைச்சல் இருக்கும்.

ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கடகம்

சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

உடல் நிலை பாதிப்பில் இருந்து தப்பிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.